Thursday, June 25, 2020

சி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு தேர்வு ரத்து


புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், கடந்த, பிப்ரவரி மாதம், 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம், 10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் துவங்கின. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், 12ம் வகுப்பில், சில பாடங்களுக்கு தேர்வு நடத்த முடியாமல் போனது. 10ம் வகுப்பை பொருத்தவரை, டில்லியில் சில பகுதிகளை தவிர, நாடு முழுவதும் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. ஒத்தி வைக்கப்பட்ட, 12-ம் வகுப்பு தேர்வுகளை, ஜூலை, 1 - 15ம் தேதிக்குள் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, சி.பி.எஸ்.இ,. கடந்த, மே மாதம் வெளியிட்டது.கொரோனா பரவல் காரணமாக, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது. இந்நிலையில், சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ஜூலை 1 முதல் 15 வரை நடத்த திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. டில்லி, மஹாராஷ்டிரா, தமிழகத்தில், தேர்வுகளை நடத்தும் சூழ்நிலை இல்லை என மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல், ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News