Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் போது காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மாணவன் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிந்திருந்தாலும் , ஒரு பாடத்தில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் கூடுதல் , குறைந்த பட்சம் 37 மதிப்பெண்கள் இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவுவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.
மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் போது பற்ற அந்த மாணவர்கள் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 , வருகைப்பதிவுக்கு 20 என்று கணக்கிட்டு மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு , தனியார் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் , தனித் தேர்வர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடுவதில் எப்படி தேர்வுத்துறை கையாளும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து தனித் தேர்வர்களுக்கான மதிப்பீடு பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்து விட்டது. ஆனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு எப்படி கணக்கிடுவார்கள் என்று இது வரை விளக்கம் அளிக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க , பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று காலை ஈரோடு மாவட்டத்தில் பேட்டி அளிக்கும் போது காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசு அறிவித்த அறிவிப்பில் இல்லாத புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
இது மாணவர்கள் , ஆசிரியர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி கணக்கிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல்களை தேர்வுத்துறை தயாரித்துள்ளது.
மாணவன் பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்திருந்தாலும் , ஒரு அந்த மாணவன் ஒரு பாடத்தில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் கூடுதல் , குறைந்தபட்சம் 37 மதிப்பெண்களாவது இருக்க வேண்டும்.
வருகை சதவீதத்தில் ஒவ்வொரு மதிப்பெண் குறையும் போதும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் கூடுதல் 2 ல் இருந்து 3 மதிப்பெண்கள் வரை அதிகரிக்க வேண்டும்.
அப்போதுதான் மீத்திறன் குறைந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியும் , வருகைப் பதிவில் இருந்து கணக்கீடு ( இறங்கு முகம் ) : காலாண்டு , அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் கணக்கீடு ( ஏறுமுகம் ) ;
பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி குறித்து இன்னும் தேர்வுத் துறை முடிவு எடுக்காத நிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி ஒரு புறம் நடந்து கொண்டு இருக்கிறது. 10 நாட்களில் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித் துள்ளதால் , விரைவாக திருத்தி முடித்து அதில் இருந்து மதிப்பெண்களை வைத்து தேர்ச்சியை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
IMPORTANT LINKS
Friday, June 12, 2020
Home
கல்விச்செய்திகள்
10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை - கணக்கீடு செய்வது எப்படி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை - கணக்கீடு செய்வது எப்படி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment