Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 7, 2020

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி.. வெளியான அறிவிப்பு.!!


10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூடியவை, சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் இருந்து தனியாக வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தனி அறையில் வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள். சுகாதார துறை உதவியுடன் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறிப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு காலையிலும், மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும்.

அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment