Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 6, 2020

அரசு மாணவர் விடுதி, 11ல் திறப்பு

அரசு விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு, தினமும் இரண்டு முறை, காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் நலவிடுதி, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் நலவிடுதிகள் என, அனைத்து விடுதிகளும் திறக்கப்பட உள்ளன.விடுதியில் தங்கும் மாணவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கும் மாணவர்களுக்கு, தினமும் காலை, மாலை என, இருவேளையும், உடல்வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மூலம் கழுவ வேண்டும்.தேர்வு முடிந்து விடுதிக்கு திரும்பும் போதும், சாப்பிடுதவதற்கு முன்னரும், கைகளை நன்கு கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான அளவு சோப்பு மற்றும் சானிடைர்களை வாங்கி, மாணவர் பயன்பாட்டுக்கு வழங்கவும், கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.உணவு சாப்பிடும் போதும், தேர்வுக்கு சென்று வரும் போதும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரும் மாணவராக இருந்தால், விடுதிகளில் தனியான இடம் அளித்து, தங்க வைக்கவும், மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில், 21: பழங்குடியினர் நலத்துறையில், 16 என, 37 அரசு பள்ளி மாணவர், மாணவியர் நலவிடுதிகள் உள்ளன. அனைத்து விடுதிகளும், 11ம் தேதி முதல் திறக்கப்படும்,' என்றனர்.

No comments:

Post a Comment