Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 13, 2020

ஜூன் 15 முதல் 6 நாட்கள் ‘இலக்குகள் 2021’ - வழிகாட்டல் வகுப்புகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கரோனா ஊரடங்கு நீடித்து வரும் சூழலில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இணைய வழியிலான இலவச வழிகாட்டல் வகுப்புகள் வரும் 15-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

முதல் நாள் (ஜூன் 15) வகுப்பில் தமிழ்ச்செம்மல் விருதாளர்,கவிஞர் தங்கம் மூர்த்தி ‘பெற்றோர்களுக்கான வீட்டுப்பாடங்கள்’ எனும் தலைப்பிலும், 2-ம் நாளில் எழுத்தாளரும் பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி ‘இணையவழி வகுப்பறைகளின் அவசியம்’ எனும்தலைப்பிலும், 3-ம் நாளில் பட்டிமன்ற நடுவரும் நடிகருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ‘நகைச்சுவையே நல்ல சுவை’ எனும் தலைப்பிலும், 4-ம் நாளில் அண்ணாபல்கலை. மேனாள் துணைவேந்தர், முனைவர் மன்னர் ஜவஹர் ‘பொன்னான பொறியியல் வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும், 5-ம் நாளில் அழகப்பா பல்கலை. மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா ‘உறவுகள் மேம்பட’ எனும் தலைப்பிலும், 6-ம் நாள் இந்திய வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் ஆர்.நந்தகுமார்,‘வாழ வழி - வேற வழி’ எனும்தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.

அறுசுவையாக 6 நாட்கள் நடைபெறவுள்ள இந்த வழிகாட்டி வகுப்புகள் காலை 11 முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்கலாம். இணைப்புக்கான zoom ID – 6251621064 (password – AIM2021). இதில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 9994119002 என்ற செல்பேசிஎண்ணில் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News