Monday, June 1, 2020

அறம் - 2020 -ஐந்து நாள் வாழ்வியல் பயிற்சி




உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்குள்ளேயே இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படக்கூடிய வகையில் நமது
இந்து தமிழ்திசை நாளிதழானது தன்னார்வமிக்க ஆசிரியர்களின் கூட்டமைப்பான
கல்வியாளர்கள் சங்கமம், உலகளாவிய அளவில் தமிழ் தொழில்முனைவோர்களை கொண்டிருக்கக்கூடிய
முதலுலகின் மூத்தகுடி அமைப்பு மற்றும்
கோயம்புத்தூர் கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி*
ஆகியவற்றுடன் இணைந்து
அறம் - 2020 என்னும்
ஐந்து நாள் வாழ்வியல் பயிற்சி வகுப்புகளை
ZOOM செயலி வழியே
ஜீன் 1 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் 12.30 வரை நடத்திட உள்ளது.

சான்றிதழுடன் கூடிய இப்பயிற்சியில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள்,பிற துறை அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

பயிற்சியின் முதல் நாளான ஜீன் 1ம் தேதி
*மனிதம் போற்றுவோம்* என்னும் தலைப்பில் இன்றைய சூழலில் மனிதநேயம் எப்படி இருக்கின்றது? எது மனித நேயம் என்பது குறித்து,
அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
முனைவர் சொ.சுப்பையா,

ஜீன் 2 ம் தேதி
*ஊடக அறம்* என்னும் தலைப்பில் ஒரு நல்ல ஊடகம் என்பது எவ்வாறு செயல்பட வேண்டும், சமுதாயத்தைக் காப்பதில், வழிநடத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து,
சிறந்த ஊடகவியலாளரும்,
உ.வே.சா.விருதாளருமான
மருது அழகுராஜ்,

ஜீன் 3 ம் தேதி
*தமிழுக்கு அறமென்று பேர்* என்னும் தலைப்பில் தமிழ் மொழியில் இலக்கிய இலக்கணங்களிலும், வாழ்வியலிலும் காணப்பட்ட, கூறப்படுகின்ற அறச்சிந்தனைகள் குறித்து,
திரைப்பட நடிகரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

ஜீன் 4 ம் தேதி
*மனித வாழ்வில் அறிவியல்* என்னும் தலைப்பில் நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வியலில் பயன்படுத்தி வந்த நடைமுறைகளில் உள்ள அறிவியல், நம்மை அறியாமலே நாம் பின்பற்றிக்கொண்டு வரும் அறிவியல் குறித்து,
உலகம் போற்றும்
அறிவியல் அறிஞரும், மங்கள்யான் திட்ட இயக்குனருமான
டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை

ஜீன் 5 ம் தேதி
*உங்களால் மட்டுமே முடியும்* என்னும் தலைப்பில் வாழ்வின் அனைத்துவிதமான மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய சக்தி ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு என்பது குறித்த தன்னம்பிக்கை கலந்துரையாடலை,
எழுத்தாளரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான ஆசிரியர்
சிகரம்சதிஷ்குமார் ஆகியோரும் இணையத்தின் வழியே தங்களது கருத்துரைகளை வழங்கி உரையாட இருக்கின்றனர்.


இதில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் ZOOM செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் வழியே இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியும்.

அறம் 2020 நிகழ்வில் பங்குபெற எவ்வித பங்கேற்புக் கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாக பங்குபெறக்கூடிய வகையிலும், ஒரே நேரத்தில் 500 நபர்கள் இணைந்து கொள்ளும் வகையிலும் இணைய வசதி எளிய முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்து தமிழ்திசையோடு இணைந்து, கல்வியாளர்கள் சங்கமம், முதலுலகின் மூத்தகுடி மற்றும் கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி ஆகியவை இணைந்து செய்துள்ளன.

நிகழ்வு தொடர்பான தகவல்களுக்கு..
9994119002

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News