புதுடில்லி; 'மீதியுள்ள, பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகளை நடத்தும், சி.பி.எஸ்.இ.,யின் அறிவிப்புக்கு தடை விதித்து, தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' என கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், 2019 - 20ம் கல்வி ஆண்டுக்கான, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள், மார்ச், மூன்றாவது வாரத்தில் துவங்கி, ஏப்ரலில் நிறைவு பெற இருந்தன.இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 25ல் அமல்படுத்திய ஊரடங்கால், பிளஸ் 2 வகுப்பில், சில பாடங்களில் தேர்வு நடத்த முடியாமல் போனது.இதையடுத்து, சி.பி.எஸ்.இ., கடந்த மாதம், 18ல் வெளியிட்ட அறிவிப்பில், 'மீதியுள்ள, பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள், ஜூலை, 1ம் தேதியிலிருந்து, ஜூலை, 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தேர்வு நடத்தப்படும் தேதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுகள், நாடு முழுதும், 15 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.அதிர்ச்சிஇந்நிலையில், பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியரின் பெற்றோர் சிலர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:நாட்டில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நேரத்தில், விடுபட்ட, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளை அடுத்த மாதம் நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு செய்து, தேதிகளை அறிவித்துள்ளது அதிர்ச்சிஅளிக்கிறது. தேர்வு நடத்தப்படும் மையங்கள் பலவும், கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இதனால், தேர்வு எழுதும் மாணவ - மாணவியர் பலரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், ஜூலையில், கொரோனா பரவல் மிக அதிகமாக இருக்கும் என, 'எய்ம்ஸ்' மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலால், வெளிநாடுகளில், 250க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, முன் நடத்தப்பட்ட தேர்வுகளில், மாணவ - மாணவியர் பெற்ற மதிப்பெண்களை வைத்து, 'கிரேடு' வழங்குமாறு, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.ஆனால், இந்தியாவில் மட்டும், மாணவ - மாணவியரின் நலனில் அக்கறை கொள்ளாமல், தேர்வுகளை நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. மாணவ - மாணவியர் தொற்றால் பாதிக்கப்பட்டால், அது அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கும்.
'கிரேடு'தமிழகம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில், 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.எனவே, மாணவ - மாணவியரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, மீதியுள்ள, பிளஸ் 2 வகுப்புகளை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். தேர்வை ரத்து செய்ய, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட வேண்டும்.முன்பு நடத்திய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்து, மாணவ - மாணவியருக்கு, 'கிரேடு' வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Thursday, June 11, 2020
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மீதி தேர்வுகள் ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment