Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 6, 2020

பிளஸ் 2 மாணவர்களுக்கான ‘உயர்வுக்கு உயர்கல்வி


பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்க லாம்? என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ மற்றும் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ‘உயர் வுக்கு உயர்கல்வி’ இணைய வழி 2-ம் அமர்வு வரும் 10-ம் தேதி நடக்கிறது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலை யில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை ஆன் லைன் வழியாக முன்னெடுத்து வருகிறது.
அதன்படி அடுத்து என்ன படிக்க லாம், எந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்பு அதிகம் என பிளஸ் 2 மாணவர்களின் கேள்விகளுக்கான பதில்களைத் தருவதோடு, மாண வர்களுக்கு பயனுள்ள வழிகாட்டு தலை வழங்கும் விதமாக ‘உயர் வுக்கு உயர்கல்வி’ என்ற ஆலோ சனை அமர்வை இணையம் வழி ‘இந்து தமிழ் திசை’ வழங்கி வரு கிறது. இந்தத் தொடரின் 2-ம் அமர்வு ஜுன் 10-ம் தேதி மாலை 3 முதல் 5 மணி வரை நடக்க உள்ளது.

இதில், ‘உயர்வுக்கு ஹோட்டல் மேலாண்மை கல்வி’ எனும் தலைப் பில் ஹோட்டல் மேலாண்மை கல்வியின் முக்கியத்துவம் குறித்து தி ரெசிடென்ஸி ஹோட்டல்ஸ் முதன்மை செயல் அதிகாரி பி.கோபிநாத், ஐ.எஃப்.சி.ஏ. நிறுவனர் மற்றும் பொதுச் செயலாள ருமான டாக்டர் செஃப் சவுந்தர் ராஜன், எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இயக்குநர் டாக்டர் ஆண்டனி அசோக்குமார் ஆகியோர் உரை யாற்றுகிறார்கள்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் ரூ.99/- பதிவுக் கட்டணம் செலுத்தி, http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்கில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் 2 மாத இந்து தமிழ் இ-பேப்பரை இலவச மாகப் பார்க்கலாம். கூடுதல் தகவல் களுக்கு 9840961923, 8870260003, 9003966866 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.‘இந்து தமிழ் திசை’ மற்றும் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இணைந்து நடத்துகிறது
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment