Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 7, 2020

பிளஸ் 2 தமிழ் விடைக்குறிப்பில் முரண்பாடு: மதிப்பெண் வழங்க ஆசிரியர்கள் குழப்பம்


திருப்பூர்:பிளஸ் 2 தமிழ் விடைத்தாள் மதிப்பீடு விடைக்குறிப்பில், முரண்பாடு உள்ளதால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.தமிழகத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், மே 28ல் துவங்கியது. இதற்காக ஆசிரியர்களுக்கு, விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, மொழிப்பாடங்களுக்கு மதிப்பீடு பணிகள் துவங்கியுள்ள நிலையில், தமிழ் தேர்வில், கேள்வி எண்: 45 (அ) பிரிவுக்கான விடைக்குறிப்பில் முரண்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. 'நெகிழி தவிர்த்து... நிலத்தை நிமிர்த்து' என்ற தலைப்பில் கேட்கப்பட்ட, ஆறு மதிப்பெண் கேள்விக்கு, கலந்துரையாடல் வடிவில் சரியான கருத்திருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்; சுற்றுச்சூழல் தொடர்பான கருத்துக்களை தொகுத்து எழுதியிருப்பின், மூன்று மதிப்பெண் வழங்கலாம் என, விடைக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், கேள்வித்தாளில்,'நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து' என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனை கலந்துரையாடல் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக' என, குறிப்பிட்டுள்ளது.தமிழாசிரியர்கள் கூறுகையில், 'விடைத்தாள் குறிப்பின் அடிப்படையில் பார்த்தால் கேள்வியை, 'கலந்துரையாடல் வடிவில் எழுதுக' என கேட்கப்பட்டிருக்க வேண்டும். கருத்துக்களை தொகுத்து எழுத சொன்னதால், பெரும்பாலான மாணவர்கள் கட்டுரையாக தொகுத்து எழுதியுள்ளனர். சரியாக எழுதியிருந்தாலும், இவர்களுக்கு விடைக்குறிப்பு படி, மூன்று மதிப்பெண் மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது. இருவித பதில்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க வேண்டும். இதனால், ஆசிரியர் தரப்பில் மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான உரிய தீர்வை தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என்றனர்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment