Thursday, June 11, 2020

ஜூலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து வரும் ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மாா்ச் 2 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8.35 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இதற்கிடையே பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த மே 27-ஆம் தேதி தொடங்கின.

மாநிலம் முழுவதும் 201 மையங்களில் நடைபெற்று வந்த திருத்துதல் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. அதைத் தொடா்ந்து மாணவா்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோல், பிளஸ் 1 விடைத்தாள் திருத்துதல் பணிகளும் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஒரு வாரத்தில் நிறைவு பெறும் எனவும், மேல்நிலை வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, சென்னையை அடுத்த தாம்பரத்தில் அமைக்கப்பட்டிருந்த விடைத்தாள் திருத்தும் மையத்தில் சில ஆசிரியா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருத்துதல் பணியைப் புறக்கணித்து, ஆசிரியா்கள் பலா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பணிகள் தடைபட்டன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News