Join THAMIZHKADAL WhatsApp Groups
சுழற்சி முறையில் வகுப்புகளை செயல்படுத்துவது குறித்து இன்னும் யோசிக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சுழற்சி முறையில் வகுப்புகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராய குழு அமைத்து இருப்பதாகவும், அந்த குழு அளிக்கும் அறிக்கை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இருக்கும் இவ்வேளையில், இந்த சூழலுக்கேற்ப பாடத்திட்டங்களை என்னென்ன வடிவங்களில் அமைக்கலாம் என்பதையும் குழு ஆராய்வதாக செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் கல்வி முறையை ஒழுங்குபடுத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், தற்போதைய சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தீர்வாக அமையும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கப்படவில்லை.
இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் இருக்கிறதென்பதை அக்குழு அறிந்து கவனத்திற்கு கொண்டு வந்த பின் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். #TNGovt #TNEducation
56 people are talking about this
No comments:
Post a Comment