Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
கறிவேப்பிலை என்பது நாம் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக குழம்பு, பொரியல் போன்ற அனைத்திலுமே, தாளிக்கும் பொழுது கருவேப்பிலை இல்லாமலேயே இருக்காது. அந்த அளவிற்கு நாம் கறிவேப்பிலையை அனைத்து உணவு வகைகளையும் சேர்த்து வந்துள்ளோம். கறிவேப்பிலை என்பது வாசனைக்காக மட்டுமே உபயோகிக்க கூடிய ஒரு வாசனை பொருள் என்றே நம்மில் பலரும் நினைத்து வருகிறோம். ஆனால் உண்மையிலேயே கருவேப்பிலையில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.
மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலையின் நன்மைகள் சொல்லி அடங்காது.
இந்த கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த கருவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது. இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் இருக்கிறது.
ரத்த சோகை பிரச்சினையை குறைக்க
கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது. இந்த போலிக் ஆசிட் என்பது முக்கியமாக உடலில் உள்ள இரும்புச் சத்தை ஈர்ப்பதற்கு மற்றும் கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கிறது. இந்த கறிவேப்பிலையில் அதிகமான இரும்புச் சத்தும் இருக்கிறது. அதே நேரத்தில் போலிக் ஆசிட் இருக்கிறது.
இவை இரண்டும் அதிகமாக இருக்கும் பொழுது இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் அடியோடு குறைந்து விடும் என்று கூறுகின்றனர். முடிந்தவரை நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை வியாதியுடன் சண்டையிடும்
கறிவேப்பிலை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குறைந்து விடும் என்று ஓரிரு நாட்கள் கறிவேப்பிலையை சாப்பிட்டு விட்டு சர்க்கரை வியாதி குறையவில்லை என்று கூறுவது சரியான விஷயம் கிடையாது. கறிவேப்பிலையில் உள்ள பலவிதமான நன்மைகள், சர்க்கரையின் அளவை ரத்தத்தில் சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இது செய்ய சில காலங்கள் எடுக்கும். சிறுவயதில் இருந்தே இது போன்ற இயற்கையான விஷயங்களை நாம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதிகள் போன்ற பிரச்சினைகள் நமக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.
நார்ச்சத்து நிறைந்தது
கறிவேப்பிலை உடலில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கிறது.
மேலும் இதில் உள்ள நார்ச் சத்தானது சர்க்கரையின் அளவு மிகவும் சீராக வைத்திருக்கிறது. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும் பொழுது நார்சத்து என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்பொழுதுமே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. கறிவேப்பிலையில் நார்ச்சத்து மிகவும் அதிகமான அளவில் இருப்பதால், இந்த வேலையை அது செய்துவிடுகிறது. கறிவேப்பிலை இயற்கையாகவே உங்களது சர்க்கரை வியாதிக்கு மருந்தாக வேலை செய்கிறது.
செரிமானத்தை சீராக்குகிறது
முக்கியமாக நாம் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு உண்மையான காரணம் என்ன என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம். கறிவேப்பிலை என்பது மணத்திற்காக மட்டுமல்ல முக்கியமாக பழங்காலத்தில் நம் செரிமானத்திற்கு ஆகவே அதிகம் சேர்த்து வந்துள்ளனர். கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.
ஆனால் இதைவிட அதிகமான அளவில் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.
அது நம் சுவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினால் கறிவேப்பிலையில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாததால் அதை அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மை விளைவிக்கும். முக்கியமாக இது உடலில் உள்ள கொழுப்பு சத்தை உறிஞ்சி விடுகிறது என்று கூறுகின்றனர். கொழுப்பு சத்தை குறைக்கும் பொழுது உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது. எனவே கொழுப்பு சத்தை உறிஞ்சி விடுகிறது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் சீராக்குகிறது.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது
பலவிதமான ஆராய்ச்சிகளிலும் கறிவேப்பிலை என்பது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது என்று கூறுகின்றனர். இயற்கையாகவே கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும், அதற்கான காரணிகள் கறிவேப்பிலையில் அதிகமாக இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.
கறிவேப்பிலையில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது.
எனவே இது கொலஸ்ட்ரால் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது.கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து விட்டாலே இயற்கையாகவே நல்ல கொலஸ்ட்ரால் என்பது அதிகரித்துவிடும். எனவே நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் எச்டிஎல் நம் உடலில் அதிகரிக்கவும் இது உதவி செய்கிறது. இந்த நல்ல கொலஸ்ட்ரால் என்பது இதயத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியதாகும்.
நரையை போக்குகிறது
இன்று நம்மில் பலருக்கும் சிறு வயதிலேயே தலை முடி நரைத்து விடுவது வழக்கமாகிவிட்டது. கறிவேப்பிலை என்பது மிகவும் முக்கியமாக நம் தலைமுடி நிறத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நம் தலைமுடி நரைத்து விடாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியது முதலில் இருந்தே கறிவேப்பிலையை மிகவும் அதிக அளவில் சாப்பிட்டு வருவதுதான்.
நரைத்த தலைமுடியை சீராக்குவது என்பது கடினமான காரியம்.
ஆனால் தேவையான அளவு நாம் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் நரை பிரச்சனை வருவது முற்றிலும் குறைந்து விடும் என்பது பலரது கருத்து. நரை மட்டும் அல்லாமல் முடி கொட்டுதல் முடியில் உள்ள பலவிதமான பிரச்சனைகளையும் இந்த கறிவேப்பிலை ஆனது அதில் உள்ள சத்தானது சரி செய்கிறது. கறிவேப்பிலையை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை.
கறி வேப்பிலையை பச்சையாகவும் கழுவி சாப்பிடுவது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு நேரடியாக கொண்டு வந்து சேர்க்கும். தினமும் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மேலே குறிப்பிட்ட பலவிதமான பிரச்சனைகளில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS
Wednesday, June 10, 2020
தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment