இணையவழிக் கல்வி தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது சாத்தியமாக இருக்காது. அதேநேரத்தில் சூழல் மாறும்போது எப்போது பள்ளி களை திறக்கலாம் என்பதை கல்வி யாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி அதற்கு பிறகு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.இணையவழிக் கல்வி (ஆன்லைன்) தொடர்பாக இருதினங்களுக்குப்பின்னர் முதல்வருடன் ஆலோசித்து ஒப்புதல் பெற்றபிறகு அறிவிக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment