இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரிப்பதை நம்மால் காண முடிகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 15,968 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 465 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாட்டில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 4,56,183ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கையானது 14,476ஆகவும் அதிகரித்துள்ளது.
பாதிப்புகள் அதிகரிப்பதால் , ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அரசு இயந்திரம் பாதி முடங்கியுள்ளது. இந்நிலையில் , மத்திய அரசு இன்சூரன்ஸ் , ஓட்டுனர் உரிமம் , போன்ற உரிமங்களின் காலக்கெடுக்களை நீடித்து வருகிறது.
அதே போல் , வருமானவரி தாக்கல் செய்வதற்கும் பான் - ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் அளித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது ;
2018-19 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகசாம் வரும் ஜூலை 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 2019-20 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கா கால அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment