Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 12, 2020

கொரோனாவுக்கான முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகம்


மாஸ்கோ: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகமாகி உள்ளது.கொரோனா சிகிச்சைக்கு 'அவிஃபாவிர்' என்ற மருந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அரசு இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவீத முதலீடு உள்ள கெம்ரர் என்ற நிறுவனம் இம்மருந்தினை உற்பத்தி செய்துள்ளது. ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் தொற்றால் மிக குறைந்த சமயத்திலேயே, அதாவது சோதனைகள் நடந்து வரும் நிலையிலேயே இம்மருந்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.மாதந்தோறும் 60,000 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும். இம்மருந்தினை வாங்க 10 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை கடந்து விட்டது. இருப்பினும் அங்கு இறப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது. இதுவரை அங்கு 6,532 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News