Friday, June 12, 2020

'நோய் எதிர்ப்பு சக்திக்காக புதினா குடிநீர்

சென்னை; ''நோய் எதிர்ப்பு சக்திக்காக, சீரகம் குடிநீர், புதினா குடிநீர், கறுப்பு உளுந்தங்கஞ்சி போன்றவற்றை, வீட்டிலேயே தயாரித்து பருகலாம்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.சென்னை மாநகராட்சி, வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.பின், அமைச்சர் அளித்த பேட்டி:ராயபுரம் மண்டலம், ராயபுரம், துறைமுகம் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. மேலும், சேப்பாக்கம் மற்றும் எழும்பூரில், தலா இரு வார்டுகளும், இதில் அடங்கும். தினமும், 250 பரிசோதனைகள் வீதம், 4,500 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள, 1,400 தெருக்களில், 500 தெருக்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்றும், 50 தெருக்களில், ஐந்துக்கும் மேற்பட்ட தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, கபசுர குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.நோய் எதிர்ப்பு சக்திக்காக, சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்படி, எளிமையான வைத்தியம் செய்யலாம். பச்சை மிளகாய் ஒன்று, மஞ்சள், சீரகம், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சிய குடிநீரை, காலையில் வெறும் வயிற்றில், ஐந்து நாட்கள் குடிக்க வேண்டும். புதினா இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, சர்க்கரை போட்டு, தேநீர் போல் குடிக்கலாம். வாரத்திற்கு இரு முறை, புரதச்சத்து மிகுந்த, கருப்பு உளுந்து கஞ்சி தயாரித்து சாப்பிட்டால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மருத்துவ வல்லுனர் குழு பரிந்துரைத்தால், ஊரடங்கு குறித்து, முதல்வர் அறிவிப்பார். அது, கொள்கை முடிவு. அதுபோன்ற சூழல் ஏற்படாவண்ணம், மக்கள், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்றவற்றை, தீவிரமாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News