அனைத்து வயதினரும் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதை டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரண்டு வகையான உணவுகள் பச்சையாகவோ, மரங்களிலிருந்தோ, புதர்களிலிருந்தோ அல்லது மண்ணின் கீழிருந்தோ கிடைப்பதால் அவற்றை உட்கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது என்ற சந்தேகம் எழும்.
மேலும், தயாரிப்பு முதல் சேமிப்பு நேரம் வரை பாக்டீரியாக்கள் உங்கள் காய்கறிகளில், பழங்களில் வாழ வாய்ப்புகள் உள்ளன. அதிகளவு ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் உண்மையில் நச்சுத்தன்மை உடையவை. நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
காய்கறி அல்லது பழத்தை வெட்டிய பின் ஒருபோதும் கழுவ வேண்டாம். அப்படி கழுவும்போது அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை இழக்கின்றன. மேலும் அசுத்தங்கள் ஏதேனும் இருந்தால் அவை மேற்பரப்பில் இருந்து உள்ளே பரவுகின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுவதால் அவற்றின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற முடியும். ஆனால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதன் மீது தெளிக்கப்படும் பிற ரசாயனங்களை அகற்ற முடியாது.
No comments:
Post a Comment