Friday, June 12, 2020

மீண்டும் கடுமையான ஊரடங்கு?


கோவை; ''கொரோனா வைரசின் வீரியம் அதிகரித்துள்ளதை அறிந்துள்ளதால், மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து, முதல்வர் முடிவெடுப்பார்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:கொரோனா வைரசின் வீரியம் கூடியிருப்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஆரம்பத்தில், 95 சதவீதம் பேருக்கு, எவ்வித அறிகுறிகளும் இல்லாமல், கொரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. தற்போது, 80 சதவீதம் பேர், அறிகுறி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.மீதமுள்ள, 20 சதவீதம் பேருக்கு கடுமையான உடல்வலி, காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் தேவை ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வீரியம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து, மத்திய அரசுதான், தகவல் வெளியிட வேண்டும். மீண்டும் ஊரடங்கு வருமா என்பதை, மருத்துவ குழுவின் ஆலோசனைகளை கேட்டு, முதல்வர் முடிவெடுப்பார். ஒருவேளை, கொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளக்கூடிய சூழ்நிலை வந்தால், கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்குவதோடு, அவர்களுக்கு, 'பல்ஸ் ஆக்ஸி மீட்டர்' என்ற கருவியை கொடுப்பதற்காக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கென, 20 ஆயிரம், 'பல்ஸ் ஆக்ஸி மீட்டர்' வாங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் இருக்கும் நோயாளிகளை, பிற மாவட்டங்களுக்கு அனுப்பி, சிகிச்சை அளிக்கும் திட்டம் ஏதுமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News