Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 6, 2020

கழிவறையில் அமர்ந்தபடி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்

கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதன் மூலம் அந்த இடத்தில் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருக்கிறது. வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்ஃபோனை பயன்படுத்துவதில் கவனமாக இருப்பார்கள். அப்படி நீண்ட நேரம் அமர்ந்தபடி டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால் மூலம் அல்லது அந்த இடத்தில் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால் கீழ் மலக்குடலில் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது என்று விவரிக்கிறார் ஆய்வின் மருத்துவர் ஒருவர் . மூலம் என்பது ஒரு நாளில் நீண்ட நேரம் அமர்வதால் வராது. தினம் தினம் அப்படி அமர்ந்திருப்பது நிச்சயம் மூலத்தை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு. இந்த கழிவறையில் நீண்ட நேரம் அமரும் பழக்கம் இன்று செல்ஃபோன்களால் மட்டுமல்ல. இதற்கு முன் பிடித்த புத்தகத்தை கழிவறையில் அமர்ந்து கொண்டு படிக்கும் பழக்கம் இருந்தது.மூலம் வருவதற்கு முன் அறிகுறிகளாக எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்றவற்றை பட்டியலிட்டுள்ளனர்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment