Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 7, 2020

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: பேருந்துகளில் பயணிக்கும் மாணவா்களுக்குஅடையாள அட்டை அவசியம்


பொதுத்தேர்வுக்காக பேருந்துகளில் பயணிக்கும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு அடையாள அட்டை அவசியம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்களது மாவட்டத்துக்கு தலா ஒரு ஒருங்கிணைப்பு அலுவலரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் அலுவலா், மாணவா்களுக்குத் தேவையான பேருந்துகளின் விவரம், பேருந்து வழித்தடம் ஆகியவற்றின் விவரங்களை போக்குவரத்து துறையின் மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதன் நகலை பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும்.

பொதுத்தேர்வுக்காக பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து ஆசிரியா்களும், மாணவா்களும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். மேலும் மாணவா்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் உடன் வைத்திருப்பது அவசியம். இது குறித்து அவா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் தெரியப்படுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment