சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை (TN School) திறக்க தற்போது சாத்தியமில்லை. முதல்வருடன் ஆலோசித்த பிறகு ஆன்லைன் வகுப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (Sengottaiyan) தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நடைபெற்று வருவதால், அடுத்த மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. ஆனால் கொரோனா (COVID-19) அச்சம் காரணமாக பல மாநிலங்கள் பள்ளிகளை திறப்பதை தள்ளி போட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை வைத்து பார்த்தால், இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது சரியாக இருக்காது என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சிகின்றனர்.
இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (K A Sengottaiyan) கேட்டபோது, நோய் தொற்று பரவி வரும் வைத்து பார்த்தால், இந்த சூழலில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை. ஆனால் மாணவ-மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில், முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
டெல்லியில் கொரோனா தொற்று (Coronavirus in Delhi) நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் ஜூலை 31-வரை மூடப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment