Friday, June 26, 2020

உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மிகுதியாக்க இந்த வழிகளை பின்பற்றலாம்


பொதுவாக ஒருவர் அதிக மன அழுத்தமாக இருக்கும்போது, அதை குறைக்க அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். இப்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முயற்சி செய்துவருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த தூக்க சுழற்சியை சரிசெய்யவும் . உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் உங்கள் வேலையை சரியாக செய்ய உதவுகிறது மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை வழிநடத்துகிறது. ஆகையால் , தினமும் 6 முதல் 7 மணிநேரம் வரை தூக்கத்தைப் பெறுவதை உறுதிசெய்யுங்கள். இதில் தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பும் பாதிக்கப்பட்டிருக்கும். ஆதலால், நன்றாக தூங்குவது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மிகுதிப்படுத்தும் . உங்கள் வாழ்வில் உள்ள அழுத்தங்களையும் எதிர்மறையான சூழ்நிலைகளையும் நிர்வகிப்பதற்கான சமாளிக்கும் வழிமுறைகளை நாம் அனைவரும் கற்றுக்கொள்ளலாம். அதிகளவு மன அழுத்தம் அழற்சி செயல்பாட்டின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது . இதன் விளைவாக, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படும் மற்றும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News