Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
புதுடில்லி : 'கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு, வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் போகும்' என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் அறிகுறிகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கு, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி, சளி, வயிற்றுப்போக்கு, தொண்டை வலி போன்ற அறிகுறிகள், முதலில் தென்பட்டுள்ளன.இதையடுத்து, அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல், சுவை மற்றும் வாசனை அறியும் திறனும் இல்லாமல் போனதாக, சில நோயாளிகள் தெரிவித்து உள்ளனர்.
இவை, சுவாச பிரச்னைகளின் அறிகுறிகளாக உள்ளன. ஆகையால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு, சுவை மற்றும் வாசனை அறியும் திறன் இல்லாமல் போகலாம். வயதான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நோயாளி களுக்கு, சோர்வு, பசியின்மை, வயிற்றுப் போக்கு, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். அவர்களுக்கு காய்ச்சல் இல்லாமலும், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள், பெரியவர்களுக்கு தென்படுவதுபோல், சிறுவர்களுக்கு இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'ரெம்டெசிவிர்' மருந்து பரிந்துரைகொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டோருக்கு, வைரஸ் தடுப்பு மருந்தான, 'ரெம்டெசிவிர்'ஐ வழங்க, மத்திய சுகாதாரத்துறை நேற்று பரிந்துரை செய்துள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும், 'டோசிலிசுமாப்' மருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் வழங்கப்பட்டு வந்த, மலேரியா தடுப்பு மருந்தான, 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்', ஆரம்ப கட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கமுடியாது என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
IMPORTANT LINKS
Sunday, June 14, 2020
சுவை,வாசனை தெரியவில்லையா? வைரஸ் அறிகுறியாக இருக்கலாம்!
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment