கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எந்த முடிவையும் தமிழக அரசு இன்னும் வெளியிடாமல் இருக்கும் நிலையில் பாட புத்தகங்களுக்கான விலை பட்டியலை தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பதினோராம் வகுப்பு பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வகுப்பு பாட புத்தகங்களுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை அதிகபட்சமாக 150 ரூபாய் வரையும்,
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 130 ரூபாய் முதல்180 ரூபாய் வரையும்,
பன்னிரெண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அதிகபட்சமாக 180 ரூபாய் வரையும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment