Tuesday, June 16, 2020

கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..! இறுதி செமஸ்டர் பல்கலை தேர்வுகள் ரத்து..,


கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு தேர்வு ரத்துசெய்யப்ட்டுள்ளது. இந்நிலையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் காண தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடத்த திட்டமிட்டது. ஆனால் இந்திய முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் தேர்வுகள் எதுவம் நடக்காமல் போனது.

இன்று ஜூன் 16ம் தேதி பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Controller of Examinations D.லஸர் அவர்கள் இறுதி செமஸ்டர்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். இறுதி செமெர்ஸ்ட்டர் தேர்வு மதிப்பெண்கள் இடைக்கால தேர்வு மற்றும் இன்டெர்னல் மதிப்பெண்களை வைத்து கணக்கிடப்படும் என தெரிவித்துள்ளார். இது ரெகுலர் மற்றும் அரியர் மாணவர்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News