Monday, June 22, 2020

உயா்கல்விக்கான ஊக்கத்தொகை: மாணவா்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு


உயா்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க, பிளஸ் 2 முடித்த மாணவா்களின் வங்கிக்கணக்கு விவரங்களை உடனடியாக இஎம்ஐஎஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு, அரசு உதவி பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 மாணவா்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.107.1 கோடி அவா்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 1 லட்சத்து 69 ஆயிரத்து 108 மாணவா்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் மட்டுமே கல்வித்தகவல் மேலாண்மை வலைத்தளத்தில் (இஎம்ஐஎஸ்) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே, எஞ்சியுள்ள 3.65 லட்சம் பேரின் விவரங்களை உடனே பதிவேற்றம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், ஏற்கெனவே பதிவு செய்த வங்கிக் கணக்கு விவரங்களையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News