Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 10, 2020

குழந்தையின் உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிமுறைகள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் 'ஆரோக்கியமான குழந்தை' என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும்இருக்க வேண்டும்.

உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன் பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.

அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறு வயதிலே இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், ஆஸ்துமா, வயிறு பிரச்சனைகள், எலும்பு பிரச்சனைகள், சரும பிரச்சனைகளான பூஞ்சை தொற்று, சூட்டால் வரும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

மருத்துவரிடம் அழைத்து சென்று உயரம், எடை, வயது ஆகியவற்றை சொல்லி பி.எம்.ஐ (BMI) செக் செய்து கொள்ளலாம். எடை குறைவு - பி.எம்.ஐ <18.5 ஆரோக்கியமான எடை - பி.எம்.ஐ 18.5 - 24.9 க்குள் இருக்க வேண்டும். அதிக எடை - பி.எம்.ஐ 25 - 29.9 உடல்பருமன் - பி.எம்.ஐ 30 அல்லது அதை விட அதிகமாக இருந்தால் உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகும்.

குழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம். குழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கம்.

குழந்தையின் உடல் எடை குறைய புதினா டீ, இஞ்சி டீ குடிப்பது, பால் சேர்க்காத பழச்சாறுகள் மயோனைஸ் சேர்க்காத சாலட் ஆகியவை குழந்தையின் உடல் பருமனை குறைக்க மிகவும் பயன்படுகிறது. தினமும் காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News