Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஜூன் 15ம்தேதி துவங்குகிறது. தேர்வு, சமூக விலகல் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றி நடத்தப்படுகிறது. ஒரு தேர்வறையில், பத்து மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வறை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை அதிகரிக்கும் வகையில், அனைத்து நிலை வகுப்பு ஆசிரியர்களையும் தயாராக இருப்பதற்கு கல்வித்துறை அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், மூன்று வட்டாரங்களிலும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஜூன் 8ம்தேதி உடுமலை கல்வி மாவட்டத்தில் இருப்பதையும், தேர்வுப்பணிகளுக்கு தயார்நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை விடுத்துள்ளனர்.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment