Friday, June 19, 2020

பெயர் உச்சரிப்பு அரசாணை வாபஸ்: அமைச்சர் அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள, ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே, ஆங்கிலத்தில் உச்சரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை, திரும்பப் பெறுவதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள, பெரும்பாலான ஊர்களின் பெயர்கள், தமிழில் வேறு மாதிரியாகவும், ஆங்கிலத்தில் வேறு மாதிரியாகவும் உச்சரிக்கப்படுகின்றன. தமிழில் உச்சரிப்பதுபோல், ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில், 1,018 ஊர்களின் பெயர்களை மாற்றி, ஏப்.,1ல் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், ஏராளமான பிழைகள் இருந்தன. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து, அந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக, அமைச்சர் பாண்டியராஜன், நேற்று தன், 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், நிபுணர்கள் உதவியுடன், தமிழ் உச்சரிப்புக்கேற்ப, சரியான ஆங்கில வார்த்தையை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில், புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News