Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவ, மாணவியரின் வருகைப்பதிவேடு விபரங்கள் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட கல்வி அலுவலரிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.கொரோனா பரவலால், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை, அரசு ரத்து செய்தது. அத்துடன் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மேலும், மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையிலும், வருகை அடிப்படையிலும் மதிப்பெண்களை தயார் செய்ய, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் உள்ள,
303 அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மாணவ, மாணவியரின் வருகைப்பதிவேடு விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் அவற்றை பெற்றனர். எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, 2020 மார்ச், 16 வரையிலும், பிளஸ் 1 வகுப்பு விடுபட்ட தேர்வு எழுத இருந்த மாணவ, மாணவியருக்கு, பிப்., 12 வரையிலும் வருகைப் பதிவு பெறப்பட்டது. தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தவிர்த்து, பிற ஆசிரியர்கள் இதில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
IMPORTANT LINKS
Saturday, June 13, 2020
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களின் வருகைப் பதிவேடு சமர்ப்பிப்பு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment