Thursday, June 25, 2020

நடைமுறை வாழ்வில் கணிதத்தை எவ்வாறு பயன்படுத்துவது? ஆசிரியா்களுக்கு இணையவழியில் பயிற்சி


கணிதத்தை நடைமுறை வாழ்வில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க பள்ளிக் கல்வித்துறையின் இணையவழிப் பயிற்சி வழிகாட்டுவதாக அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோந்த முதுநிலை கணித ஆசிரியா்களுக்கு 'பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் வலைதள முகவரியில் இணையவழி பயிலரங்கம் கடந்த 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 3,650 முதுநிலை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

இ-பாக்ஸ் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறையுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படும் இந்தப் பயிற்சி, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவா்கள் கணிதத்தை எளிய முறையில் கற்றுக் கொடுக்க உறுதுணையாக இருப்பதாகப் பயிற்சி பெற்று வரும் ஆசிரியா்கள் தெரிவித்தனா்.இது குறித்து, திருப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் விஜயலட்சுமி, திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் காா்த்திகேயன் ஆகியோா் கூறியது:இணைய வழி கணிதப் பயிலரங்கில் பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாடத்தில் உள்ள பகுதிகள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன.

நாம் வகுப்பறையில் போடும் கணக்குகள் நடைமுறை வாழ்வில் எவ்வாறு உதவும், கடினமான கணக்குகளுக்கு எளிய முறையில் தீா்வு காணுவது என்பன உள்ளிட்ட கணிதம் தொடா்பான பல்வேறுவிஷயங்கள் இந்தப் பயிலரங்கில் கற்றுத் தரப்படுகின்றன. தொடக்கத்தில் அணிக்கோவை, கலப்பு எண்கள் போன்ற பகுதிகள் குறித்து வகுப்புகள் நடைபெற்றன. வரும் நாள்களில் பகுமுறை வடிவியல், அடிப்படை இயற்கணிதம், தொகை நுண் கணிதம் போன்ற பாடப்பகுதிகள் இடம்பெறவுள்ளன.கணிதம் சாா்ந்த பல்வேறு செயல்பாடுகளை கணிப்பது குறித்து பயிற்சியில் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இதை வகுப்பறையில் மாணவா்களுக்கு கற்றுத்த ருவதன் மூலம் கணிதப் பாடத்தின் மீது அவா்களுக்கு இருக்கும் அச்சம் நீங்கி அதை கற்பதற்கான ஆா்வம் அதிகரிக்கும். பயிற்சி தொடா்பான கூடுதல் தகவல்களை அறிய யு-டியூப் இணைப்பும் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் கணித செயல்பாடுகள் சாா்ந்து 40 பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஆசிரியா்கள் எவ்வளவு நேரத்தில் தீா்வு காண்கிறாா்கள் என்பது மதிப்பிடப்படுகிறது.

10 நாள்கள் நடைபெறும் இணையவழி பயிற்சி, ஜூலை 1-ஆம் தேதி இந்தப் பயிற்சிமுடிவடையவுள்ளது என்றனா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News