தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவது பற்றிய கேள்விக்கு அமைச்சர் கேபி அன்பழகன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வரும் 15ம் தேதி தொடங்க இருந்த 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதேபோல, தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், "தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையங்களாக பல்வேறு கல்லூரிகள் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல, தனிமைப்படுத்தும் வார்டுகளாகவும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் கல்லூரி தேர்வுகளை நடத்துவது என்பது அரிதான காரியம். அதேவேளையில், தேர்வை ரத்து செய்வது பற்றியும் இதுவரை முடிவெடுக்கவில்லை. இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை செய்த பிறகே, உரிய முடிவெடுக்க முடியும்," எனக் கூறினார்.
IMPORTANT LINKS
Friday, June 12, 2020
கல்லூரி செமஸ்டர் தேர்வு நடக்குமா..? அமைச்சர் அன்பழகன் பதில்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment