திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக டெங்கு, எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோய் பரவல், கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகமாகி வருகிறது. இந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 378 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வேகமாக பரவி வருவதால் திருவனந்தபுரம், மலப்புரம், கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
கொரோனா அச்சம் ஒருபுறம் இருக்க, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் டெங்கு, எலிக்காய்ச்சலும் இப்போது ேவகமாக பரவ தொடங்கி இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 589 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 91 பேருக்கு எலிக் காய்ச்சலும் பரவி உள்ளது. இந்த நோய் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில்தான் அதிகமாக பரவி உள்ளது. இந்த காய்ச்சல்களை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment