Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆண்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம்.
தக்காளியில் வைட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து சம அளவில் உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தால் ஆன்டி செப்டிக்காக செயல்படும்.
இது போக 150 கிராம் தக்காளியில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது, தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்து கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச் சத்தும் அதிகமாக உள்ளது. அ
ு வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் ரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும்.
சத்தான ஊட்டச் சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும் அதையும் மீறி இன்னும் பல நன்மைகளை உள்ளடக்கிய தக்காளி சருமத்திற்கும், எலும்புகளுக்கும் நல்ல ஒரு ஊட்டமாக விளங்குகிறது.
இதில் கேரட், பீட்ரூட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோடின் தக்காளியிலும் உள்ளது. அது சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன், புற ஊதாக் கதிர்களில் இருந்து காக்கும், சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
வலுவான எலும்புகளுக்கு தக்காளி உதவுகிறது. வைட்டமின் கே, மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. இதில் லைகோபீன், எலும்பின் பெருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் உதவுவது தக்காளி.
தக்காளி ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் கொழுப்பு படிவதை தடுக்கிறது. மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
தக்காளியில் உள்ள லைகோடீன் தான் இதற்கும் துணை புரிகிறது. முக்கியமாக புரோஸ்டேட், கருப்பைவாய் புற்று, வாய்புற்று, தொண்டை புற்று, வயிற்று புற்று, உணவுக்குழாய் புற்று, குடல் புற்று, கருப்பை புற்று போன்ற பல வகையான மிகவும் துன்பத்தை தரக்கூடிய புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்க தக்காளி உதவுகிறது. குரோமியம் அதிகம் இருப்பதால், இது சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
கண்ணுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வராமல் தடுக்கும், புரை வளர்வதை தடுக்கிறது.
தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். கூந்தலை அழகாகவும் காண்பிக்க தக்காளி உதவுகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் பித்தப்பையில் கற்கள் உருவாவதையும் தக்காளி தடுக்கும்.
லேசானது முதல் கடுமையான வலியை (வாதம் அல்லது முதுகு வலி) சந்திக்கும் நோயாளிகளுக்கு தக்காளி உதவுகிறது, இதில் உள்ள பயோப்ளே மற்றும் கரோடினாய்டுகள் அதிகம் உள்ளதால், அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.
தினமும் தக்காளி எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகம் ஆகாமல் தடுக்கப்படுகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து எடையை அதிகம் ஆகாமல் தடுக்கிறது. வயிற்றையும் நிறைக்கும், கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவாகவும் இது விளங்கும்.
IMPORTANT LINKS
Wednesday, June 24, 2020
Home
மருத்துவம்
ஆண்கள் தக்காளியை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்களை சந்திக்க நேரிடும் தெரியுமா?..
ஆண்கள் தக்காளியை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்களை சந்திக்க நேரிடும் தெரியுமா?..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment