கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பாக, நரம்பு சம்பந்தமான அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், நரம்பு சம்பந்தமான அறிகுறிகள் ஏற்படும் என்று அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேருக்கு தலைவலி, தலைசுற்றல், வாசனை தெரியாமல் இருப்பது, கவனம் செலுத்துவதில் சிரமம், பக்கவாதம், பலவீனம் மற்றும் தசைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதனால் கொரோனா வைரஸ் நரம்பு மண்டலத்தை குறி வைப்பதற்கான அறிகுறிகளும் இருப்பதால் மக்களும், மருத்துவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் ஒட்டு மொத்த நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மூளை, முதுகெலும்பு, நரம்புகள், தசைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மூளை மற்றும் நரம்புகளை தாக்கும் வைரஸால், நோய்த்தொற்றுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயக்கங்கள் குறைய வாய்ப்புள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, கொரோனாவால் ஏற்படும் நரம்பியல் பாதிப்புகளை எவ்வாறு கண்டறிவது,. அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலகிற்கு புதிது என்பதால் இதன் செயல்பாடுகளை புரிந்து கொள்வதற்காக புதிய புதிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment