Friday, June 19, 2020

பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடும் பணி: 'டாப்சீட்'களில் விபரங்கள் பதிவு


உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 60 பள்ளிகளைச் சேர்ந்த 5,048 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்தனர். கொரோனா பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், பொதுத்தேர்வை அரசு ரத்து செய்தது.மாணவர்களின் வருகைப்பதிவேடு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்க அரசு அறிவித்துள்ளது. மதிப்பெண் வழங்குவதில், குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க, வருகைப்பதிவேடுகளை, கல்வி மாவட்ட அலுவலகங்களில் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, தற்போது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய 'டாப்சீட்'கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பெயர் மற்றும், விபரங்கள் அச்சடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் மட்டும் நிரப்பப்படாத புதிய 'டாப்சீட்'டுகள் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின், 'ப்ரோகிரஸ் ரிப்போர்ட்', ஆசிரியர்கள் வைத்திருக்கும் மதிப்பெண் பட்டியல் மற்றும், மதிப்பெண் நிரப்பப்பட்ட 'டாப்சீட்'களை இணைத்து, கல்வித்துறையில், 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. உடுமலை கல்வி மாவட்டத்தில், அதற்கான பணிகள் பள்ளிகளில் துவங்கியுள்ளது.ஆசிரியர்கள் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை சரிபார்த்து, அவற்றை, எண்பது சதவீதத்துக்கு மாற்றி, பொதுத்தேர்வு மதிப்பெண்களாக, டாப்சீட்டில் பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News