Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 4, 2020

நரைமுடியை முற்றிலும் தவிர்க்க உதவும் மூலிகை ஹேர் டை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இளைய தலைமுறையினருக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் முக்கியமாக இருப்பது இளம் வயதில் ஏற்படும் நரைதான். பல்வேறு ரசாயனம் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவதால் உடலளவில் பல பிரச்சனைகள் உண்டாகும். மேலும், ரசாயனம் கலந்த ஹேர் டை எல்லாம் உடனே சட்டென்று முடியை கருப்பாக்க செய்யும். ஆனால் இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேள்வி எழுப்புபவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது. மூலிகை ஹேர்டைக்கு பயன்படுத்த வேண்டிய பொருள்களில் மிக முக்கியமானது மருதாணி என்னும் ஹென்னா பொடியும், அவுரி இலையும். அவுரி இலை கருநீலம் கொண்டது. மருதாணி முடிக்கு இளஞ்சிவப்பை கொடுக்கும். பளீரென்ற வெள்ளை முடியை மருதாணி சிவப்பாக்கினால் அவுரி இலை தன்னுடைய கருநீல நிறத்தை கொண்டு கருமையாக்கும் இதுதான் மூலிகை ஹேர் டை என்று அழைக்கப்படுகிறது. இப்போது இதை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம் . மூலிகை ஹேர்டை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை சுத்தமாக்கிகொள்ளுங்கள். நெல்லிக்காய் அளவு பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் சாறு பிழிந்து அந்த சாறில் சிறிதளவு நீர் விட்டு, இரண்டு டீஸ்பூன் அளவு டீத்தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள்.அதன் பிறகு அந்த நீரை வடிகட்டி மருதாணி பவுடர் 3 டீஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடுங்கள். மறுநாள் காலை தலையில் வேர்ப்பகுதி முதல் நுனி வரை நரை இருக்கும் இடங்களில் நன்றாக தடவி 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலை குளித்துவிடுங்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News