Wednesday, June 10, 2020

பொதுத்தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு!




மர த்துவ வல்லுநர்கள் நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்துள்ளதாலும் , பெற்றோர்களின் கோரிக்கைகளையும் , நோய்தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு , மாணவர்களை நோய்த் தொற்றிலிருந்து காக்கும் பொருட்டு அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது .

( i ) 2019-20ஆம் கல்வியாண்டில் , 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11 ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் , தொழிற்கல்வி கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ஆகியவற்றிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது .

( ii ) இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர் .

( ii ) மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும் .

( iv ) 12 ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுதாத மாணவர்களுக்காக நடத்தப்படவிருந்த மறுதேர்வு ஒத்திவைக்கப்படுகிறது . மேலும் , சூழ்நிலைக்கேற்ப 12 ம் வகுப்பிற்கான மறுதேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் .

( ஆளுநரின் ஆணைப்படி )

தீரஜ் குமார்
அரசு முதன்மைச் செயலாளர் .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News