Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 5, 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயில் புல்லிங்


கரோனா வைரஸை தடுக்க இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால் கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க ஒரே வழி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுதான். சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில சுய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பரிந்துரைத்துள்ளது. இதில் ஆயில் புல்லிங்கும் ஒன்று.ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங் என்றால் என்ன? இது நச்சுத்தன்மையை போக்க ஒரு ஆயுர்வேத வழிமுறை. அதிகாலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது நெய்யைப் பயன்படுத்தி வாயை 5 முதல் 10 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்வழி பாக்டீரியாவிலிருந்து விடுபடுவதோடு பற்களுக்கு இடையில் உள்ள பாக்டீரியாவை வெளிவர செய்கிறது. இது உங்கள் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் உங்கள் ஈறுகளை வலுப்படுத்தும். மாற்று மருத்துவத்தில், பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஆயில் புல்லிங் பயன்படுகிறது.

எப்படி செய்வது?

ஆயுஷ் அமைச்சகத்தின் நோயெதிர்ப்பு-அதிகரிக்கும் சுய பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி,
1 தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
அதனை விழுங்கிவிடாமல் 5 முதல் 10 நிமிடங்கள் வாயில் நன்றாக கொப்பளித்து அதைத் துப்பவும். அதாவது எண்ணெயை வாயில் வைத்து நன்கு கொப்பளிக்கவும்.
பின் வெது வெதுப்பான நீரில் மீண்டும் வாயை கொப்புளியுங்கள்.
இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.
ஆயில் புல்லிங்

பிற நன்மைகள்:
ஈறு அழற்சி போன்ற ஈறு நோய்களைப் போக்க உதவுகிறது.
இந்த ஆயுர்வேத முறை இயற்கையாக பற்களிலிருந்து கறையை நீக்கி, அவற்றை வெண்மையாக்கும்.
தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது நிச்சயமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இது இயற்கையாக நிகழும் லாரிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துகள் இயற்கையில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை கொல்லும்

No comments:

Post a Comment