Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 24, 2020

ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏலக்காய்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏலக்காய்

வாசனை பொருட்களின் அரசியாக இருக்கும் ஏலக்காய் சமையல் பொருட்களில் சுவை கூட்டுவதற்கான முதன்மை பொருள்.

பெரும்பாலும் இனிப்பு பொருட்களில் ஏலக்காயில் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஏலக்காய் பசி உணர்வை மாட்டும் தூண்டுவதில்லை காதல் உணர்வை தூண்டுவதில் வல்லமை கொண்டது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா.

இப்படிப்பட்ட ஏலக்காயின் பலன்களையும் அதனை உண்ணும் முறையினையும் பார்க்கலாம்.

பார்ப்பதற்கு அழகாகவும் சிறிதாகவும் இருக்கும் ஏலக்காய் ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது. மூச்சு தொடர்பான சிக்கல் உள்ளவர்கள் ஏலக்காயை அதிகமாக எடுத்து கொள்ளலாம். சிறுநீரக கல் , நரம்பு தளர்ச்சி மற்றும் பலவீனம் போன்றவைகளை இச்சிறிய ஏலக்காயின் நறுமணம் மிக்க விதைகள் நீக்குகின்றன.

பாலுணர்வை தூண்டுவதற்கு பயன்படும் ஏலக்காய் மன அழுத்தத்தை நீக்கவும் பயன்படுகிறது. நம் அனைவருக்குமே ஏலக்காய் டீயும் அது தரும் புத்துணர்வும் தெரிந்த விடயம்தான் இல்லையா. மன அழுத்த நேரங்களில் ஒரு ஏலக்காய் டீயை அருந்துங்கள். எல்லா பிரச்னைகளும் சரியாகி விடும்.

அது மட்டும் இன்றி நாவறட்சி, வெயில் வியர்வையால் ஏற்படும் தலைவலி, உமிழ்நீர் சுரத்தல், மார்பு சளி, நீர் சுருக்கு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு ஏலக்காய் அருமருந்தாக செயல்படுகிறது.

மார்க்கெட்டிங் மற்றும் வேலை விடயமாக வெயிலில் அதிகமாக அலைபவர்கள் எப்போதும் ஏலக்காய்களை தங்கள் உடன் எடுத்து செல்லலாம். அரை டம்ளர் நீரில் நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி போட்டு கஷாயமாக்கி குடிப்பதால் தலைசுற்றல் போன்றவை நீங்கும்.

வாயு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் ஏலக்காயை பொடி செய்து அரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அதனை தினமும் உணவருந்த முன் சாப்பிட்டு வர வாயுத் தொல்லை நீங்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News