Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 6, 2020

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த வகையில் தற்போது ஐ.எம்.ஏ தமிழக பிரிவு கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு செய்துள்ளது.

லேசான பாதிப்பு உள்ள ஒரு நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூபாய் 2,31,820 வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் கட்டணமாக ரூபாய் 4,31,411 என நிர்ணயம் செய்து உள்ளது.

இதனைத்தொடர்ந்து கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி லேசான அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் நாள் ஒன்றுக்கு 5,000 - 7,500 ரூபாய் வரை வசூலிக்கலாம். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களிடம் நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வரை வசூலிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment