Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னை: புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம் செய்வதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய - மாநில அரசுகளின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், இந்த கல்வி ஆண்டில், புதிய கல்வி கொள்கை அமலாக உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின்படி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், புத்தகங்களில் திருத்தம் செய்ய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புத்தகங்கள் திருத்தப்பட்டால், என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை பின்பற்றும், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம் ஏற்படும் என, கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment