திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் வெளிமாநில பக்தர்கள், இரு மாநில அரசுகளிடம் இருந்தும் இ-பாஸ் பெறுவது அவசியம் என்று திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ரமேஷ் ரெட்டி கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயி லில் 3 நாள் வெள்ளோட்டத்துக்கு பிறகு அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய நேற்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர். சர்வ தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் விஐபி பிரேக் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. காலை 6.30 முதல் 7.30 மணி வரையிலான விஐபி பிரேக் தரிசனத்தில் நேற்று 53 பேர் சுவாமியை வழிபட்டனர். பிறகு சர்வ தரிசனம் தொடங்கியது.
நேற்று முன்தினம் 6,750 பக்தர் களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட தில், இவர்கள் அனைவரும் நேற்று சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, அலிபிரி சோதனைச் சாவடியில் பக்தர்களுக்கு தெர் மல்ஸ்கேன் செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டது. அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப் பட்டது. மேலும், கோயிலுக்குள் செல்லும்போதும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளோட்டத் தின் கடைசி நாளான நேற்று முன் தினம் உண்டியல் மூலம் ரூ.20 லட்சம் காணிக்கை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது கரோனா பாதிப்பால் வெளி மாநில பக்தர்கள் சுவாமியை தரிசிக்க இயலாமல் வருத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளி மாநில பக்தர்கள் திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்றாலும் இவர் களை, ஆந்திர எல்லைகளில் போலீஸார் அனுமதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி நகர எஸ்பி ரமேஷ் ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, 'மத்திய அரசின் நிபந்தனையின்படி வெளிமாநில பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, முதலில் இரு மாநில காவல் துறையிடம் இருந்தும் இ-பாஸ் பெற வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் தரிசன டிக்கெட்டை மாநில எல்லைக்குள் நுழையும் அனுமதிச் சீட்டாக ஏற்க இயலாது. இதை பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும்' என்றார்.
முன்னதாக இவர், திருப்பதி பாலாஜி பஸ் நிலையம், அலிபிரி சோதனைச் சாவடி, அலிபிரி போன்ற இடங்களில் ஆய்வு மேற் கொண்டார். சைலன்ஸர் நீக்கப் பட்ட புல்லட் வாகனங்கள் திரு மலைக்கு வர அனுமதியில்லை என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment