Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 5, 2020

பள்ளிகள் திறக்கமுடியாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர்களின் ஆதரவும், எதிர்ப்பும்...


கொரோனா தொற்று காரணமாக தற்போது பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புக்களுக்கு பெற்றோர் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து காணப்படுகிறது. ஆன்லைன் முறையிலான வகுப்புகள் பலனளிக்கும் வகையில் இருப்பதாக ஒரு தரப்பு பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

பாடங்கள் நடத்துவது மட்டுமின்றி, நடனம், ஓவியம் ஆகியவற்றையும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வழங்குவதால், பெற்றோரும், மாணவர்களும் வரவேற்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் படிப்பது தங்களுக்கும், பெற்றோருக்கும் கடினமாக இருப்பதாக கூறுகிறார் 2ஆம் வகுப்பு படிக்கும் நித்யமீனா... இதேபோல், ஆன்லைன் வகுப்புகள், பள்ளி வகுப்பறைகள் போல வராது என சில ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவைப் போல, எதிர்ப்பும் இருந்தாலும், தற்போதைய சூழலில் அதை தவிர்க்க முடியாது என்றே பல தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க... ஏப்ரல்14-ஆம் தேதிக்கு பிறகு நாகையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று : காரணம் என்ன?

No comments:

Post a Comment