இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹினா தாகூர் என்ற மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவரது தந்தை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பியூனாக வேலை செய்து வருகிறார். படிப்பில் சுட்டியான மாணவி ஹினா தாகூரை ஊக்குவிக்கும் விதமாக அவரது தந்தை வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு நாள் சப்-கலெக்டராக நியமித்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை சப்-கலெக்டர் ஜதின் லால் மேற்கொண்டார். இதுபற்றி சப்-கலெக்டர் ஜதின் லால் கூறுகையில், "மாணவி ஹினா தாகூரின் தந்தை எனது அலுவலகத்தில் பியூனாக வேலை பார்க்கிறார். மாணவியை வாழ்த்துவதற்காக அலுவலகத்திற்கு அழைத்தேன்.
அப்போது அவரது எதிர்கால விருப்பம் குறித்து கேட்டபோது, ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என கூறினார். அதனால், அவருடைய கனவுக்கு எனது பங்களிப்பை வழங்கும் வகையில், ஒரு நாள் மட்டும் சப்-கலெக்டராக பணியாற்ற ஏற்பாடு செய்தேன்' என்றார்.
No comments:
Post a Comment