Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 4, 2020

பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தர திட்டம்

திருப்பூர் : பள்ளிகளில், உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் அளவு, வீரர்களை உருவாக்கும் வகையில், திறமை உள்ளவர்களை, இளம் வயதிலேயே கண்டறிந்து பயிற்சி அளிக்கும் 'கேலோ இந்தியா' (விளையாடு இந்தியா) திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் கீழ், நாட்டில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, சமூகப்பயிற்சி மேம்பாட்டுத் திட்டம், தற்போது, துவங்கப் பட்டுள்ளது. உடற்கல்வித்துறையினர் கூறியதாவது: கொரோனா உட்பட தொற்று மற்றும் தொற்றா நோய்களைத் தடுக்க, உடற்பயிற்சி வாயிலாக, மாணவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும். இதை அடிப்படையாகக் கொண்டு, பள்ளிகளில், உடற்கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டுத்துறையில் தலைசிறந்து விளங்கும் கல்வியாளர்கள் மட்டுமல்லாது, சர்வதேச வல்லுனர்களும் பங்கேற்று, உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளனர். ஏற்கனவே பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள், தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, 'பிட் இந்தியா' இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, உடற்கல்வித்துறையினர் கூறினர்.

No comments:

Post a Comment