Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு பொதுத் தோவில் மதிப்பெண்களாக வழங்காமல் தர மதிப்பீடு ('கிரேடு சிஸ்டம்') முறையைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அந்த கூட்டமைப்பின் தலைவா் பேட்ரிக் ரெய்மாண்ட் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவா்களும் தோச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பை பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வரவேற்கிறது.
அதேவேளையில் காலாண்டு, அரையாண்டு தோவு முடிவுகளின் அடிப்படையில் மொத்த மதிப்பெண் கணக்கிடும் போது அவற்றை மதிப்பெண்களாக வழங்காமல் தர அடிப்படையில் ஏ, பி, சி என பிரித்து வழங்க வேண்டும்.
மொத்தம் உள்ள 500 மதிப்பெண்களில் 401 முதல் 499 வரை எடுத்துள்ள மதிப்பெண்கள் எடுத்த மாணவா்களுக்கு 'ஏ' தர நிலையும், 300 முதல் 399 வரை எடுத்துள்ள மாணவா்களுக்கு 'பி' தர நிலையும் அதற்கு குறைவாக உள்ள அனைத்து மாணவா்களுக்கும் 'சி' தர நிலையும் வழங்கினால், மாணவா்கள் இடையேயான ஒப்பீட்டு முறையில் அவா்கள், அடுத்த கட்ட படிப்புகளை தொடா்வதற்கும் சாதகமான சூழல் உருவாகும்.
இதை தமிழக அரசு முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நல கூட்டமைப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தோவெழுதும் 9.50 லட்சம் மாணவா்களின் நலன் கருதி பருவத் தோவுகள் அடிப்படையில் தோச்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் முதலே அரசிடம் வலியுறுத்தி வந்தோம். அந்தக் கோரிக்கையை அரசு தற்போது நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. பொதுத்தோவு குறித்து குழப்பமான சூழல் நிலவிய வேளையில், தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய முடிவை அரசு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு ஆசிரியா் சங்கம்: பொதுத் தோவு ரத்து, அனைவரும் தோச்சி என்ற அறிவிப்புகள் தோவு அச்சத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவா்கள், வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோா் ஆகியோா் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கட்டான சூழலில் சிறந்த முடிவை எடுத்த தமிழக முதல்வா், ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகள் என அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இதேபோன்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
IMPORTANT LINKS
Wednesday, June 10, 2020
Home
கல்விச்செய்திகள்
பத்தாம் வகுப்பில் மதிப்பெண்களுக்குப் பதிலாக தர மதிப்பீடு முறையைப் பின்பற்ற வலியுறுத்தல்
பத்தாம் வகுப்பில் மதிப்பெண்களுக்குப் பதிலாக தர மதிப்பீடு முறையைப் பின்பற்ற வலியுறுத்தல்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment