மும்பை: மகாராஷ்டிராவில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி தருவதாக பாஸ் என்ற அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்வும் இறுதிக்கட்டத்தில் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு இன்னும் நடைபெறவில்லை என்பதும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த அறிவிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்ற அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகின்றனர். 3ம் ஆண்டு மாணவர்கள் பாட வாரியாக இது வரை பெற்ற சதவீதம் அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்து பட்டம் அளிக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
IMPORTANT LINKS
Monday, June 1, 2020
அனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.! முதலமைச்சர் அறிவிப்பு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Mice!
ReplyDelete