2020-ஆம் ஆண்டு வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்தாண்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காணக் கூடிய 6 கிரகணங்கள் நிகழ உள்ளது. அதில் ஜனவரி 10 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் இரண்டு சந்திர கிரகண நிகழ்வுகள் நிகழ்ந்துவிட்டன. அவற்றில் ஒரு கிரகண நிகழ்வை இந்தியாவிலிருந்து பார்க்க முடிந்தது. இந்த நிலையில் வருகிற ஜூன் 21 அன்று இந்தாண்டின் முதல் சூரிய கிரகணத்தை பார்க்க உள்ளோம்.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் சூரிய கிரகணத்திற்கும் கொரோனா தொற்றுக்கும் தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது வெளிப்பட்ட ஆற்றலால் ஏற்பட்ட மாற்றமே தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு என்று சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.
நியூக்ளியர் மற்றும் புவியியல் விஞ்ஞானியான கே எல் சுந்தர் கிருஷ்ணா என்ற அவர், வெளியிட்டுள்ள கருத்தின்படி, கடந்த டிசம்பர் 26 அம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது வெளிப்பட்ட ஆற்றல் காரணமாக உயிரி மூலக்கூறு அமைப்பில் ஏற்பட்ட மாற்றம், கொரோனா வைரஸ் பாதிப்பாக உருமாறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் உருமாற்றம் முதலில் சீனாவில் வெளிப்பட்டிருக்கலாம் என்றும், அடுத்து வரக்கூடிய சூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் சூரியக் கதிர்கள், அந்த வைரசை செயலற்றதாக்கும் என்றும் விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே நாளைமறுநாள் நடைபெறவிருக்கும் சூரிய கிரகணம், கொரோனாவை அழித்து உலகை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment