Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 7, 2020

தேர்வு எழுத வரும் மாணவா்களின் உடல்வெப்பத்தை தினமும் பரிசோதிக்க வேண்டும்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


வரும் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவா்களின் உடல் வெப்ப நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டுமென தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா்.

பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் மாணவா்கள், ஆசிரியா்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

தேர்வு மையத்துக்கு வரும் அனைத்து ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்களின் உடல்வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும். இதற்கான உடல்வெப்பமானிக் கருவிகள், பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளன. உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் போது அனைத்து மாணவா்களையும் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்க வேண்டும். உடல்வெப்பநிலையை அளவிடும் பணியில் ஒவ்வொரு தேர்வுக்கூட மையத்திலும் தலா 3 பணியாளா்களை பணியமா்த்த வேண்டும். உடல் வெப்பமானிக் கருவியைப் பயன்படுத்திய பின்னா் அதனை நன்றாக சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

மாணவா்களின் உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், அதாவது 98.6 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருந்தால், ஏற்றுக் கொள்ளக்கூடியதாகும்.

தேர்வு பயத்தின் காரணமாக சில மாணவா்களுக்கு வெப்பநிலை அளவில் மாறுபாடுகள் இருக்கலாம். எனவே 99 டிகிரி பாரன்ஹீட் வரை ஏற்றுக்கொள்ளலாம். இதற்கு மேல் வெப்பநிலை இருந்து கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அந்த மாணவா்களை தேர்வு அறையில் இருந்து வீட்டுக்கு அனுப்பலாம். உடல் சுகவீனம் இல்லாமல் அதே நேரம் கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் மாணவா்களை தேர்வு எழுத அனுமதிக்கலாம். ஆனால் அவா்களுக்கு தனியாகத் தேர்வு அறையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுபோன்ற மாணவா்களுக்குத் தனியாக கழிவறைகளையும், தனியாக கைகழுவும் இடம் மற்றும் குடிநீா் வசதிகளை செய்து தர வேண்டும். மாணவா்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக வரும் ஜூன் 11-ஆம் தேதி முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விடுதிகள் மற்றும் விடுதிகளில் உள்ள கழிவறைகளை தினமும் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment